செய்திகள்

டாகோர் – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் எடுத்து இளம் வீரர் விஹான் அபாரம்

Makkal Kural Official

திருவள்ளூர், டிச.24:

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 12 வயதுக்குட்டுப் பட்டவர்களுக்கான டாகோர் – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட் போட்டி பட்டாமிராமி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியை கல்லூரி நிர்வாக இயக்குநர் டாக்டர் ராஜேந்திர நாயுடு தொடங்கி வைத்தார்.

முதல் நாளில் 2 லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் வேலூர் அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்தது. எஸ். மிதுன் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சில் திருவள்ளூர் அணியின் ஷாத்விக் ஜோஸ் 2/10, ஜி. யுதிஷ்ட்ரா 2/14 வழங்கி சிறப்பாக பந்து வீசினர். 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களம் இறங்கிய திருவள்ளூர் அணி 16.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. எஸ். ஐசக் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் செங்கல்பட்டு அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. வி. ஹர்ஷித் 25 ரன்களும், பி.ஜி. கவின் சாய் 31 ரன்களும் எடுத்தனர். முகுந்ததரம் 2/28, கே. ஹவிஷ் 2/22 என்ற பந்துவீச்சு கணக்குகளைப் பதிவு செய்தனர். 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கில் களம் இறங்கிய ராணிப்பேட்டை அணி ஏ. விஹான் ஆஷ்லி (ராம்ப்) 7/13 என்ற அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 18 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் செங்கல்பட்டு அணி தெளிவான வெற்றியைப் பெற்றது. 7 விக்கெட் எடுத்த அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் விஹான் ஆஷ்லியை அனைவரும் பாராட்டினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *