சென்னை, டிச.5:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
6 முறை தமிழக முதல்வராக பொறுப்புவகித்த ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று காலை 10.45 மணியளவில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து அதிமுகவின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.
நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வணங்கிய எடப்பாடி பழனிசாமி பின்னர் அவரது நினைவிடத்தை சுற்றி வந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு ரோஜா மலர் தூவி வணங்கினார்.
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ஜெயலலிதாவின் சிலை மற்றும் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்ட மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஏழை, எளிய மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை அண்ணா தி.மு.க.வினர் வழங்கினார்கள்.
சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அண்ணா தி.மு.க. தொண்டர்கள் திரண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.
எடப்பாடி பழனிசாமி கறுப்பு சட்டை அணிந்து வந்தார். இதேபோன்று அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் உட்பட ஏராளமானபேர் கறுப்பு சட்டை அணிந்து வந்தனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில், அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, பொன்னையன், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, தம்பிதுரை, செம்மலை, என்.தளவாய்சுந்தரம், டி.ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர், பொள்ளாச்சி ஜெயராமன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், சி.வி.சண்முகம் எம்.பி, அன்பழகன், மோகன், என்.ஆர்.சிவபதி, ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி.,
வைகை செல்வன், பென்ஜமின், மற்றும் கமலக்கண்ணன், எஸ்.ஆர்.விஜயகுமார், ஜெயவர்த்தன், மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், ஆதி ராஜாராம், கே.பி.கந்தன், வி.எஸ்.பாபு, எம்.வி.அசோக், மாதவரம் மூர்த்தி, அலெக்சாண்டர், முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், அமைப்பு செயலாளர் ராயபுரம் ஆர்.மனோ, எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் பி.சின்னையன், வாலாஜாபாத் கணேசன்,
ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், மாணவர் அணி துணை செயலாளர் ஆ.பழனி, செய்தி தொடர்பாளர் ஒய்.ஜவஹர் அலி, மாநகர போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் இ.எஸ்.சதீஷ்பாபு, ராணி அண்ணா நகர் த.கோவிந்தன், வேளாங்கண்ணி,
பகுதி செயலாளர்கள் முகுந்தன் கோபால், சேப்பாக்கம் சிவா, இம்தியாஸ் லட்சுமி நாராயணன், இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர்கள் இ.சி.சேகர், மலர்மன்னன், வழக்கறிஞரும், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளருமான ஆர்.சதாசிவம், வட்ட செயலாளர் கே.துளசி, மயிலை டி. ஜெயச்சந்திரன், வி.எஸ். வேல் ஆதித்தன், டி.சி.கோவிந்தசாமி, பி.சந்தான கிருஷ்ணன் உள்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
2 நிமிட மவுன அஞ்சலி
ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா நினைவிட நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு வந்தார். அவருடன் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மேடைக்கு வந்தனர். அங்கு உறுதிமொழியை எடப்பாடி பழனிசாமி படித்தார். அதனை அங்கிருந்தவர்கள் திருப்பி சொல்லி ஏற்றுக்கொண்டார்கள்.
பின்னர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் 2 நிமிடம் மவுனம் அனுஷ்டித்தார்கள்.
![]()





