செய்திகள்

ஜார்க்கண்டில் என்கவுன்டர்: நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை

Makkal Kural Official

ராஞ்சி, செப் 24–

ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கும்லா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பின்னர் பதிலுக்கு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சண்டையில், நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து 3 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கும்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 3 பேர் உடல்கள் கைப்பற்றப்பட்டன என்பதை போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக்கேல் ராஜ் உறுதி செய்தார். அப்பகுதியில் மேலும் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் 15ந் தேதி வரை லேட்ஹார், சாய்பாசா, பொகாரோ, ஹசார்பாக், பலாமு, கும்லா மாவட்டங்களில் 28 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *