செய்திகள்

சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்:” நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க வீடியோ வெளியீடு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 23–

தனது சொந்த வீட்டிலேயே தனக்குத் துன்புறுத்தல் நடப்பதாக நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் இருந்து விலகி இருந்து வரும் தனுஸ்ரீ தத்தா தற்போது பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது சொந்த வீட்டிலேயே தனக்குத் துன்புறுத்தல் நடப்பதாக கூறியுள்ள அவர், தயவுசெய்து யாராவது தனக்கு உதவுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில், ‘‘சொந்த வீட்டிலேயே தம்மை துன்புறுத்துவதாகவும், மன அழுத்தம் காரணமாக தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது வீட்டில் வேலைக்கு ஆட்களைக் கூட நியமிக்க முடியவில்லை என்றும், முன்பு வேலைக்கு வந்தவர்கள் தன் பொருட்களைத் திருடிச் சென்றதாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். மேலும் தமக்கு யாராவது உதவி செய்யும்படியும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருக்கிறார்.

சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவரும் இந்த வீடியா சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *