செய்திகள்

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு : ஸ்டாலின்

Makkal Kural Official

சென்னை, ஆக. 22–

இன்று சென்னை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை வெறும் ஊரல்ல, தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என்று சென்னை போற்றும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:–

எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து, மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386.

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *