சென்னை, டிச. 12:
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.11.5 கோடி 9.46 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. இதுதொடர்பாக விமானப் பணியாளா்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
துபாயிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். யாரிடமும் தங்கம் சிக்கவில்லை. இதையடுத்து, சந்தேகத்தின்பேரில், அந்த விமானத்தில் வந்த 2 விமான ஊழியர்களை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.
தொடர்ந்து உரிய அனுமதி பெற்று, அந்த இரண்டு ஊழியர்களையும் சுங்கத்துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்து சென்று முழு உடல் பரிசோதனை செய்ரை் அவர்களின் மார்பு மற்றும் இடுப்பு ஆகிய பகுதிகளில் பெரிய அளவிலான வெல்க்ரோ ஸ்டிக்கர் பேண்டுகள் ஒட்டி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பிரித்துப் பார்த்ததில், ரூ.11.5 கோடி மதிப்புள்ள சுமார் 9.46 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், இரு விமான பணியாளர்களையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், கடத்தல் தங்கத்தை வாங்குவதற்காக, விமான நிலையம் அருகே இருக்கும் விடுதியில் தங்கியிருந்த 3 பேரை சுற்றி வளைத்து அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![]()





