செய்திகள்

சென்னை மாநகர பேருந்து டிரைவருக்கு திடீர் மாரடைப்பு:

Makkal Kural Official

சென்னை, ஜூலை 13–

சென்னையில் அரசு பஸ் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதால் பஸ் மோதி ஒருவர் பலியானார்.

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பஸ் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அரும்பாக்கம் 100 அடி சாலையில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் பாதசாரிகள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே 50 வயது நபர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மாரடைப்பு ஏற்பட்ட பஸ் டிரைவரை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *