செய்திகள்

சென்னை மாநகராட்சியில் இது வரை 57,626 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்

Makkal Kural Official

சென்னை, டிச. 15:

சென்னை மாநகராட்சியில் இது நாள் வரை 1,05,556 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 57,626 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான வெறிநாய்க்கடி, நோய்த் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதலுக்கான சிறப்பு முகாமில் 2,930 செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் செல்லப்பிராணிகள் மருத்துவமனைகளில் செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப் பொருத்துதல் மற்றும் உரிமம் வழங்கும் பணிகள் கடந்த அக்டோபர் 8ந் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செல்லப் பிராணிகளுக்கான உரிமை வழங்குவதற்கு நேற்று (14–ந் தேதி) இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களின் கோரிக்களை ஏற்றும் இப்பணியை மேலும் சிறப்புடன் மேற்கொள்வதற்கு ஏதுவாக 12ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு செல்லப்பிராணிகளுக்கான உரிமம் வழங்கும் சிறப்பு முகாம்கள் 8 இடங்களிலும், 7 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *