செய்திகள்

சென்னை, சேலம் உள்பட 4 மாவட்டங்களில் ரூ.49 கோடியில் செயற்கை இழை ஓடுதள பாதை: உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்

Makkal Kural Official

சென்னை, ஜன. 1–

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 48.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, செங்கல்பட்டு, சேலம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் செயற்கை இழை ஓடுதளப் பாதை மறுசீரமைக்கும் பணி, சர்வதேச தரத்திலான டிராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி அகாடமி, புதிய செயற்கை இழை ஓடுதள பாதை உள்ளிட்ட விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். குறிஞ்சி முகாம் அலுவலத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் காணொளி மூலம் நிகழ்ச்சி நடந்தது.

சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை இழை ஓடுதளப் பாதை மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகள் இவை.

உபகரணம் வாங்க

ரூ.14 லட்சம் உதவி

தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற மற்றும் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வகையில் தயார் செய்யவதற்காக தடகள வீரர்கள் ர.மானவ், ஜெ.ஆதர்ஷ் ராம், கூடைப்பந்தாட்ட வீரர் பி.பியோடர் ஆதித்தன், குத்துச் சண்டை வீரர் பி.தர்ஷன், தடகள வீரர் யோபின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வாலிபால் வீராங்கனைகள் ம.ராகஸ்ரீ, பா.சாதனா ஆகிய விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட மொத்தம் 2,80,000 ரூபாய்க்கான காசோலையை துணை முதலமைச்சர் வழங்கினார்.

மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற சைக்கிளிங் வீரர்கள் ச.பிரனேஷ் மற்றும் சௌ.கவிஷ் ஆகியோருக்கு மொத்தம் 12,48,580 – மதிப்பிலான சர்வதேச தரத்திலான சைக்கிள் மற்றும் உபகரணங்களை வழங்கினார்.

தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று வரும் நீச்சல் வீரர் உ.அபிஷேக்கிற்கு மலேசியாவிற்கு சென்று பயிற்சி மேற்கொள்வதற்காக ரூ.35 ஆயிரத்துக்கான காசோலையை துணை முதலமைச்சர் வழங்கினார்.

பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ், ரோல் பால் மற்றும் பூப்பந்தாட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் துணை முதலமைச்சரை சந்தித்து தாங்கள் வென்ற பதங்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

அமைச்சர்கள்

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், இரா.ராஜேந்திரன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், இ.பரந்தாமன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *