சென்னை, ஆக. 12–
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வடமாநில விரைவு ரெயிலில் கிடந்த 4 கிலோ கஞ்சாவை சென்ட்ரல் ரெயில்வே பாதுகாப்புப் பிரிவினா் கைப்பற்றினா்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப் பிரிவைச் சோ்ந்த தலைமைக் காவலா் ஜம்புலிங்கம், தலைமை காவலர் பி.யுவராஜ் உள்ளிட்டோா் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒடிஸா மாநிலம் பூரியிலிருந்து வந்த விரைவு ரெயிலில் 3 -ஆவது பெட்டியில் கேட்பாரற்று பை கிடப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு சென்று பையைக் கைப்பற்றி சோதனையிட்டபோது, அதில் இருந்த 2 பாலித்தீன் பண்டல்களில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 2 லட்சமாகும். கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா், அதை போதைத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.
![]()





