செய்திகள்

சென்னையில் 33,418 செல்லப்பிராணிகளுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தும் உரிமங்கள் விநியோகம்

Makkal Kural Official

சென்னை, நவ. 24:

சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 77 ஆயிரத்து 707 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 33,418 செல்லப் பிராணிகளுக்கு ‘மைக்ரோசிப்’ பொருத்தி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் 7 மையங்களில் 3,091 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோசிப் பொருத்தி, செல்லப் பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது.

நேற்றுடன் (23–ந் தேதி) செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் செல்லப்பிராணிகள் உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட 23.11.2025 என்ற காலக்கெடுவானது, 7.12.2025 வரை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

அவ்வாறாக, நேற்று திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப் பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுபாட்டு மையத்திலும், என மொத்தம் 7 மையங்களில் 3,091 செல்லப் பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. இதுநாள்வரை 77 ஆயிரத்து 707 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 33,418 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *