சென்னை, நவ. 16–
சென்னை பெருநகர அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு போக்சோ வழக்கு குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவிட்டதின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்களுக்கு போக்சோ வழக்கு சம்மந்தமான பயிற்சி வகுப்புகள் எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல இணை ஆணையாளர் அலுவலகம், இரண்டாம் தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பை சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையாளர் ராதிகா தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். சென்னை பெருநகர காவல், கிழக்கு மண்டல இணை ஆணையாளர் பண்டிட் கங்காதர் கலந்து கொண்டார்.
போக்சோ வழக்கு சம்மந்தமாக நடை பெற்ற பயிற்சி வகுப்பில் சரவணகுமார், (மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், செங்கல்பட்டு), டாக்டர்.ஷீலா ஜெயந்தி, (தெற்கு குழந்தைகள் நல அலுவலர்), தீபிகாமுரளி, (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்), வித்யா (துளிர் அமைப்பு/தன்னார்வலர்), டாக்டர்.உஷாராணி (தடய அறிவியல் அதிகாரி) சைலேஷ், (சைபர் தடய அறிவியல்) டாக்டர் வனிதா, காயத்திரி, (சட்டம் சார்ந்த துணை இயக்குனர், திருவள்ளூர்) ஆகியோர் கலந்து கொண்டு போக்சோ சட்டம் குறித்து விளக்கி கூறினார்கள்.
இப்பயிற்சி வகுப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையாளர் வனிதா மேற்பார்வையில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புகளில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் 9 நபர்களும், உதவி ஆய்வாளர்கள் 7 நபர்களும் மற்றும் காவல் ஆளினர்கள் 28 நபர்களும் என மொத்தம் 44 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
![]()





