செய்திகள்

சென்னையில் நாளை அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா

Makkal Kural Official

பூந்தமல்லி, டிச.17–

அண்ணா தி.மு.க. சார்பில் 18–ந் தேதி (நாளை) நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்க முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் ஏற்பாடு செய்துள்ளார்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் முகப்பேர் மேற்கு பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் தி.ப.கண்ணன் தலைமை தாங்கினார்.

அமைப்பு செயலாளரும், மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான ராயபுரம் ஆர்.மனோ, முன்னாள் எம்.பி. ஜெகந்நாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், மாவட்ட நிர்வாகிகள் ராஜா என்ற பேரழகின், கா.க. ஜனார்த்தனம், ஜி.திருநாவுக்கரசு, ஆலப்பாக்கம் லயன் இ.அரசு, க.வைத்தியநாதன், அந்தமான் கே.முருகன், சி.சார்லஸ், காட்டுப்பாக்கம் ராஜகோபால், கே.சதீஷ்குமார், குப்பு ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:–

சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். கட்சியின் அவைத்தலைவர் பதவியே சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில் இருந்தே அ.தி.மு.க. எந்த அளவுக்கு சிறுபான்மை மக்களுக்கு மதிப்பு அளிக்கிறது என்பது தெரிகிறது.

அதுமட்டும் அல்ல, சிறுபான்மை இனத்தை முஸ்லிம்மக்கள் மெக்கா புனித பயணம் செய்யவும், மானியம் வழங்கி மதிப்பு அளித்தவர் எடப்பாடியார் ஆவார். அது மட்டுமல்ல கிறிஸ்தவ மக்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் விழா ஜெயலலிதா தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. அவரது மறைவிற்கு பின்னர் எடப்பாடியார் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவது வழகு்கம். அதன்படி இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெயின் ஸ்கூல் வளாகத்தில் உள்ள லைட் திருமண மண்டபத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு மாபெரும் வரவேற்பு அளிக்க திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க. மாபெரும் வரவேற்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு பென்ஜமின் பேசினார்.

இக்கூட்டத்தில் கவுன்சிலர் டி.சத்தியநாதன், இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், மருத்துவ அணி துணை செயலாளர் எம்.ஜி.பிரேம்குமார் ஞானம், மாணவர் அணி துணை செயலாளர் சலர்மான் ஜாவித், அபிஷேக் ஜேக்கப், து.சூரியநாராயணன், பூந்தமல்லி நகர செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் எம்.என்.இம்மானுவேல், ஏ.தேவதாஸ், கே.தாமோதரன், இ.கந்தன், வட்டச் செயலாளர்கள் எம்.பி.தென்றல் குமார், காரம்பாக்கம் மகேஷ், மேட்டுக்குப்பம் ஏ.தாமோதரன், எம்.எம்.அரசு, எம்.ஆர்.முனியன், எம்.எஸ்.பச்சையப்பன், லஷ்மணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *