சென்னை, டிச. 19:
முத்தியால்பேட்டை பகுதியில் காணாமல் போன 65 வயது மாற்றுத்திறனாளி மூதாட்டியை காவல் கரங்கள் குழுவினர் மூலம் மீட்கப்பட்டு, காவல் ஆணையாளர் வழிகாட்டுதலின்பேரில் குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்டனர்.
தாம்பரம் காவல் ஆணையரக செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பேருந்து நிலையம் அருகில் வாய் பேச முடியாமல் ஆதரவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் இருப்பதாக காவல் கரங்கள் உதவி எண்ணிற்கு மூதாட்டியின் புகைபடத்துடன் விவரங்கள் அனுப்பி மூதாட்டியை மீட்குமாறு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சென்னை பெருநகர காவல் கரங்கள் தன்னார்வலர் குழு மூதாட்டி இருக்கும் இடத்திற்கு சென்று மூதாட்டியை விசாரித்து அவருக்கு வாய்பேச முடியாத மற்றும் காது கேட்காததால், விரங்கள் தெரியாததால், பாதுகாப்பு கருதி அவரை மீட்டு அவர் வைத்திருந்த பணம் ரூ.2,368 உடன் செம்மஞ்சேரி காவல் நிலைய நமூனா மூலம் முடிச்சூரில் உள்ள கை கொடுப்போம் முதியோர் காப்பகத்தில் தங்க வைத்து நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வரப்பட்டது.
விசாரணையில், மீட்கப்பட்ட மூதாட்டியின் பெயர் மும்தாஜ் (65), காது கேட்காத, வாய் பேச முடியாத மற்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி என்பதும், இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில், 7–ந் தேதி முத்தியால்பேட்டை பகுதியிலிருந்து, கொடுங்கையூர், எஸ்.ஏ.காலனி 10வது தெருவில் உள்ள இவரது சகோதரி மகன் வீட்டிற்கு செல்லும்போது, காணாமல் போனதால், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, பெண் காணவில்லை பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காவல் குழுவினர் தேடி வந்ததும் தெரியவந்தது. அதன்பேரில், காவல் கரங்கள் குழுவினர் மூதாட்டியின் சகோதரி மகன் ஷபிக் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண் அறிவுரையின்பேரில், அவரது குடும்பத்தாருடன் நல்ல முறையில் மீள சேர்த்து வைக்கப்பட்டார். மும்தாஜை பத்திரமாக மீட்டு ஒப்படைத்த சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், காவல் கரங்கள் குழுவினர் மற்றும் தன்னார்வலருக்கு மும்தாஜ் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் காவல் உதவி ஆணையாளர் (மக்கள் தொடர்பு அதிகாரி) எம்.எஸ்.பாஸ்கர், காவல் கரங்கள் காவல் ஆய்வாளர், மேரி ரஜு மற்றும் காவல் கரங்கள் தன்னார்வலர் உடனிருந்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் இதுவரை 9,285 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு, இதில் 1,498 நபர்கள் காணாமல் பரிதவித்த அவர்களது குடும்பத்துடன் மீள சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் சரக பகுதிகளில் உதவிகள் கோரும் உறவுகளற்ற, வீடுகளற்ற நோய்வாய்பட்ட நபர்களுக்கு உதவிட 9444717100 என்ற காவல் கரங்கள் உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு உதவிகள் பெற சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
![]()





