சென்னை, ஆக. 6–
சென்னையில் ஓய்வூதியதாரர்களின் குறைகளை களை குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 25–ந்தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மிசித்தார்த்ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைகளை தீர்க்கும் குறைதீர் நாள் கூட்டம் 12.9.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 8-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்று அரசு கருவூலங்கள் மற்றும் சம்பள கணக்கு அலுவலகங்களில் ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வருபவர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதில் குறைகள் ஏதும் இருப்பின் சுருக்கமாக இரட்டை பிரதிகளில் கீழ்காணும் படிவத்தில் மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 62, இராஜாஜி சாலை, சென்னை–1 என்ற முகவரிக்கு 25.8.2025-க்குள் அனுப்பி வைத்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()





