செய்திகள்

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி

Makkal Kural Official

விழுப்புரம், டிச. 11:

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், பொியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணியினை கலெக்டர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், க.பொன்முடி எம்.எல்.ஏ. முன்னிலையில் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவ:

முதலமைச்சர், விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மை துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையினை வௌியிட்டதோடு, பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறார்.

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை 2025-2026-ஆம் ஆண்டு அரவைப்பருவத்திற்கு கரும்பு பதிவு 10,347 ஏக்கர் பரப்பு ஆகும். இந்த அரவைப்பருவத்தில் 3,01,000 மெ.டன் கரும்பு அரவை செய்யப்படவுள்ளது. 9.50% சர்க்கரை கட்டுமானம் எதிர்நோக்ப்படுகிறது. மேலும் நடப்பு அரவைப்பருவத்தில் சப்ளைச் செய்யப்படும் கரும்பு டன் ஒன்றுக்கு உத்தேசமாக ரூ.4,000ஃ- வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 18 மெகாவாட் திறன் உடைய இணை-மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகின்றது. 2024-25-ஆம் ஆண்டின் வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசின் 110 விதியின் கீழ் அறிவிப்பு செய்யப்பட்டதன்படி, ஆலையின் 18 மெகாவாட் மின் உற்பத்தி திட்டத்திற்கு ரூ 6.31 கோடி செலவில் புதிய டர்பைன் ரோட்டார் அசம்பிளி நிறுவ உரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன மற்றும் ஆலையின் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேர் அயனி மற்றும் எதிர் அயனி பரிமாற்றி ரூ.22 இலட்சத்தில் நிறுவப்பட்டுள்ளது.

மேலும், பணிக்காலத்தில் இறந்த ஊழியர்களது வாரிசுதாரர்களுக்கு இதுவரை 69 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் செயலாட்சியர் இரா.முத்துமீனாட்சி, விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கு.ஓம் சிவசக்திவேல், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் எஸ்.விஸ்வநாதன், எம். சந்திரசேகரன், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் என்.கோமதி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ச.ஜெயந்தி, பெரியசெவலை ஊராட்சி மன்ற தலைவர் க.வீரப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *