செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை ரெயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு, சோதனை

Makkal Kural Official

சென்னை, ஆக. 14–

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரெயில் நிலையங்களில் பலத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 79-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோல, சென்னை உள்பட முக்கிய ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்படவுள்ளது. தமிழக ரயில்வே காவல் துறையை மற்றும் மத்திய ரெயில்வே பாதுகாப்புப் படை பிரிவினர் சென்னை ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரெயில்வே நடைமேடைகள், தண்டவாளங்களில் ரோந்து, துப்பறியும் நாய்கள் மூலமாகவும், வெடிகுண்டு சோதனை பிரிவு நிபுணர்கள் மூலமாகவும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. பயணிகளின் உடமைகள் முழுமையாக சோதனை நடத்திய பிறகு, ரயில் நிலையத்துக்கு உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ரெயில்நிலையங்களில் நுழைவு வாயிலில் பாதுகாப்பு சோதனை செய்யப்படுகிறது. மேலும் பார்சல்களும் தீவிர சோதனை செய்யப்படுகின்றன. இதுதவிர ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் குறித்து கண்காணிப்பு அறைகளிலிருந்து ரெயில் பாதுகாப்பு படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் ஆயுதங்கள் ஏந்திய ஆர்பிஎப் போலீசார் தீவிர ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *