சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள்
செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254–வது நினைவு நாள்

Makkal Kural Official

சிலை, நினைவு தூணுக்கு 20–ந் தேதி அ.தி.மு.க. சார்பில் மாலை: எடப்பாடி அறிவிப்பு

சென்னை, ஆக.18–

ஒண்டிவீரன் 254–வது நினைவு நாளையொட்டி 20–ந் தேதி பாளையங்கோட்டையில் அவரது சிலைக்கு

அ.தி.மு.க. சார்பில் மாலை அண்ணா தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 254–வது வீரவணக்க நினைவு நாளான 20–ந் தேதி — புதன் கிழமை காலை, அண்ணா தி.மு.க. சார்பில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் அமைந்துள்ள ஒண்டிவீரனுடைய மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு, முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி துணைச் செயலாளருமான வி.எம். ராஜலெட்சுமி, முன்னாள் எம்.பி. என். சந்திரசேகரன் உள்ளிட்ட அம்மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் தச்சை என். கணேசராஜா சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நெல்கட்டும் செவல்

அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுக்கா, நெல்கட்டும் செவலில் அமைந்துள்ள ஒண்டிவீரன் நினைவுத் தூணுக்கு முன்னாள் அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி, முன்னாள் எம்.பி. என். சந்திரசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் சி. கிருஷ்ணமுரளி சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகர், தென்காசி வடக்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *