செய்திகள்

சீன – நேபாள எல்லையில் மண்சரிவு: 17 பேர் மாயம்

Makkal Kural Official

சிகாசே, ஜூலை 8 –

சீன – நேபாள எல்லையில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்மேற்கு சீனாவின் ஷிசாங் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள சிகாசே நகரில் அமைந்துள்ள ஜிராங் நகரியத்தில், சீன – நேபாள எல்லையை ஒட்டிய ஜிராங் துறைமுகப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 17 பேர் மாயமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டுமானத் தொழிலாளர்கள்

இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போன 17 பேரில், 11 பேர் சீன எல்லையில் இருந்தவர்கள். எஞ்சிய 6 பேர் நேபாளப் பகுதியில் இருந்த சீன கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர். இந்த மண்சரிவு குறித்து மேலும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், மாயமானவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *