செய்திகள்

சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து எம்.பிக்களும் ஆதரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

Makkal Kural Official

திருவண்ணாமலை, ஆக. 18–

துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று திருவண்ணாமலைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:–

தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களும், கட்சி பேதமின்றி, சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அவரை வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது தமிழகத்துக்கான வாய்ப்பு என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *