:- ராஜா செல்லமுத்து :-
சென்னையை விட்டு வெளியூர் சென்றிருந்த செல்வபாரதி, நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை, ஹபிபுல்லா சாலையில் சென்று கொண்டிருந்தான், அவன் நினைவில் ஹபிபுல்லா சாலையின் வரலாறு நீண்டது.
‘ஹபிபுல்லா சாலை, சென்னை, தியாகராய நகரில் இருக்கும் முக்கியச் சாலை. சர் முகமது ஹபிபுல்லா என்ற முன்னாள் அரசியல்வாதி மற்றும் பிரிட்டிஷ் அரசின் நிர்வாகியின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
1920 களில் சென்னை திட்டமிடப்பட்ட நகரமாக உருவாக்கப்பட்ட போது அப்போதைய மாகாண அரசாங்க அதிகாரிகளின் பெயர்கள், நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டன. சர் முகமது ஹபிபுல்லா இவர் சென்னை மாகாண ஆளுநர் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாகவும் 1934 இல் பணியாற்றினார். 1920 களில் பனகல் ராஜா தலைமையிலான சென்னை மாநகர அரசு தி.நகர் ஒரு திட்டமிட்ட நகரப் பகுதியாக உருவாகியது .அந்தப் பகுதியில் சாலைகள், பூங்காக்களுக்கு நீதிக்கட்சியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் பெயரிடப்பட்டன தற்போது ஹபிபுல்லா சாலை மிகப்பெரிய விலை உயர்ந்த வணிகப்பகுதியாகவும் ஜவுளி மற்றும் நகைக் கடைகளுக்கு பெயர் பெற்று விளங்குகிறது. நல்லி சில்க்ஸ், போத்தீஸ் போன்ற ஜவுளிக்கடைகள் இந்தச் சாலையில் இருக்கின்றன. இந்தச் சாலை, சென்னையின் நகர வளர்ச்சிக்கும் மேலும் பல்வேறு வரலாற்று நிகழ்வு தொடர்புடையதுமாய் இருக்கிறது. நடிகை சாவித்திரி அவர்களின் பிரம்மாண்டமான வீடு இங்கே தான் இருந்தது.இந்தச் சாலை கோடம்பாக்கத்தில் தொடங்கி தேனாம்பேட்டை வரை நீண்டு இருக்கிறது .தி. நகர் பரபரப்பான வனப் பகுதி. அமைதியான குடியிருப்பாக இருந்தது.
சர் முகமது ஹபிபுல்லா 1869 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். ஆற்காடு நவாப் குடும்பத்தை சேர்ந்தவர். 1895 இல் வேலூர் நகராட்சியின் தலைவராக தன்னுடைய பொது வாழ்க்கையைத் தொடங்கினார். 1919–ல் லீக் ஆஃப் நேஷனல் கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பங்கேற்றார். 1920–ம் ஆண்டு முதல் 1924 வரை சென்னை மாகாண ஆளுநரின் நிர்வாகக் குழுவில் வருவாய் துறை உறுப்பினர், இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் கல்வி உறுப்பினராக 1925 –- 1930 வரை பணியாற்றினார்.
திருவாங்கூர் திவானாக 1934 – 1936 இருந்தபோது ஈழவர், கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அரசுப் பணிகளில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு வழங்கக் குழு அமைத்தார். மேலும் திருவாங்கூர் படைகளில் நாயர் இல்லாத பல சமூகத்தவர்களும் சேர வழி வகுத்தார். இவரது நிர்வாகச் சிறப்பைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் ‘கான் பகதூர் ‘ என்ற பட்டத்தை 1905 இல் வழங்கியது. 1922-ல் நைட் பேச்சுலர் பட்டத்தையும் வழங்கிச் சிறப்பித்தது. .சர் முகமது ஹபிபுல்லா ஜெனிவாவில் நடந்த லீக் ஆஃப் நேசன்ஸ் மாநாட்டில் இந்தியாவின் முதல் பிரதிநிதி ஒருவராக கலந்து கொண்டார் 1926 1927 ல் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடிய இந்தியக் குழுவில் பங்கு வகித்தார்.
ஹபிபுல்லா சாலையில் கவிஞர் அறிவுமதி அவர்களின் அலுவலகம் அமைந்திருந்தது அந்த அலுவலகம் இளம் கவிஞர்கள், திரைப்பட உதவி இயக்குநர்களின் சரணாலயமாக இருந்தது அத்தனை பேருக்கும் கவிஞர் அறிவுமதி ஒரு வழிகாட்டியாகவும் ஆசானாகவும் ஒரு ஆலமரமாகவும் இருந்தார், என்பதில் மிகை இல்லை.
ஹபிபுல்லா சாலை ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகம், இலக்கியவாதிகள் வசிக்கும் இடமாக இருந்தது. பழம்பெரும் நடிகை சாவித்திரி அவர்களின் பிரம்மாண்டமான இல்லம் இந்த சாலையில் தான் இருந்தது. 12 கிரவுண்ட் பரப்பளவு உள்ள அந்த இல்லத்தில் அந்தக் காலத்தில் முதன்முதலாக நீச்சல் குளம் கட்டினார் .எஸ்வி ரங்காராவ் என்ற புகழ்பெற்ற நடிகர் இந்தச் சாலையில் தான் வசித்தார். இந்தச் சாலை ஒரு காலத்தில் மாயாபஜார் என்று அழைக்கப்பட்டது .கவிஞர் கண்ணதாசன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்கள் இந்தச் சாலையை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கிறார்கள்.
1970களில் தி.நகர் பகுதியில் ஒரு கிரவுண்டு நிலத்தின் விலை 500 ரூபாய் மட்டுமே இருந்தது .1920க்கு முன்பு வரை தற்போதைய தி.நகர் மயிலாப்பூர் ஏரி என்ற பெரிய நீர் நிலையாக இருந்தது. 1923 -1925 காலகட்டத்தில் நீதிக்கட்சியில் அந்த நீர்நிலை சமப்படுத்தப்பட்டு குடியிருப்பாக மாற்றப்பட்டது.
சர் முகமது ஹபிபுல்லா சென்னை மாகாண வருவாய்த் துறை உறுப்பினராகவும் , 1920 -1924 இந்திய வைஸ்ராய் நிர்வாகக்குழு உறுப்பினராகவும் , 1925 – 1930 பணியாற்றினார் .இவர் நிர்வாக திறமைக்காக 1922 ஆங்கிலேய அரசு அவருக்கு நைட் (Knight) என்ற பட்டத்தை வழங்கியது. கோடம்பாக்கத்திற்கும் இந்தச் சாலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சினிமா தயாரிப்பு அலுவலகங்கள் மற்றும் கலைக்கூடங்கள் இங்கு அதிகம் இருந்தன .இந்தச் சாலையில் நவீன உணவகங்கள், ஆடை அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இருக்கின்றன.
1950 1960 களில் இந்தச் சாலை சினிமா பாரடைஸ் என்று அழைக்கப்பட்டது .நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் அரண்மனை போன்ற இல்லத்தில் இந்தப் பகுதியில் வசித்தார். அங்கு அவர் திரைப்படத் துறையினருக்கு விருந்துகளும் அங்கே நடந்த படப்பிடிப்புகளும் அந்தக் காலத்து செய்தித்தாள்களில் இடம் பெற்றன. தமிழ் ச சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் பாகவதர், புகழின் உச்சியில் இருந்த போது, அடிக்கடி இந்தச் சாலைக்கு வந்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன.
சென்னையில் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற பள்ளிகளில் ஒன்றான ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மற்றும் இந்தச் சாலை கர்நாடக இசை மற்றும் பரதநாட்டிய கலைக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிறைய சபாக்கள் இருக்கின்றன. பங்களாக்கள் முதல் வணிக வளாகங்கள் வரை 1970களில் வரத் தொடங்கின. 1980 களுக்கு பிறகு பழைய பங்களாக்கள் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்பாக மாற்றப்பட்டது.
ஹபிபுல்லா சாலை ஜி என் செட்டி சாலை சந்திப்பில் தொடங்குகிறது. இது மேற்கு நோக்கி திருமலை பிள்ளை சாலை மற்றும் கோடம்பாக்கம் பகுதியின் எல்லை வரை முடிகிறது .இந்த சாலையை ஒட்டி உள்ள கலாச்சாரக் கலை மையமான வாணி மஹால், இந்த சாலையின் சந்திப்பில் உள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க வளாகம் இந்தச் சாலையின் அருகே அமைந்துள்ளது. சென்னையின் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் சாலையின் வித்யோதயா பள்ளி ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீ ராகவேந்திரா மடம், பல நவீன உணவகங்கள் மற்றும் பிரத்தியேக ஆடைகள் நிறுவனங்கள் இருக்கின்றன. இச்சாலையில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் வள்ளுவர் கோட்டம் அமைந்துள்ளது ‘
என்று ஹபிபுல்லா சாலையின் மொத்த வரலாற்றையும் நினைத்துக் கொண்டே ஹபிபுல்லா சாலையில் நடந்து கொண்டிருந்தான், செல்வபாரதி.
![]()





