செய்திகள்

சிறுகதை …. டாக்டர் பெசன்ட் சாலை….! …. ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

‘டாக்டர் பெசன்ட் சாலை’ என்று எதற்குப் பெயர் வைத்தார்கள்? டாக்டர் பெசன்ட் என்பவர் யார்?’ என்ற குழப்பம் ஆரோக்கியசாமிக்கு வந்தது? தற்போது இருக்கும் Al ஐப் பயன்படுத்தியும், நூலகத்திற்குச் சென்றும் டாக்டர் பெசன்ட் சாலையைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தான்.

‘ டாக்டர் பெசன்ட் சாலை, சென்னை எழும்பூர் – ராயப்பேட்டை பகுதிகளை இணைக்கும் ஒரு சாலையாக இருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரரும் சமூக ஆர்வலருமான அன்னிபெசன்ட் அம்மையாரின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அன்னிபெசன்ட் அம்மையார் பிரம்மஞான சபையின் தலைவராக இருந்து சேவைகள் செய்தவர். இந்தச் சாலையில் பிரிட்டிஷ் காலத்துக் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் வீடுகள், அலுவலகங்கள் இருக்கின்றன. ராயப்பேட்டையில் உள்ள புகழ் பெற்ற அமீர் மஹால் ஆற்காடு நவாப்பின் இல்லம் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் போன்ற முக்கிய இடங்களுக்கு மிக அருகில் இந்தச் சாலை அமைந்துள்ளதால் சென்னையில் முக்கிய வரலாற்றுப் பதிவாக இந்தச் சாலை இருக்கிறது’ என்று வாசிக்க ஆரம்பித்தான்.

இந்தச் சாலை முன்பு ஐஸ் ஹவுஸ் சாலை என்று அழைக்கப்பட்டது. மெரினா கடற்கரையில் உள்ள புகழ் பெற்ற ஐஸ் ஹவுஸ் இப்போது விவேகானந்தர் இல்லம் கட்டிடத்திற்கு செல்லும் முக்கிய பாதையாக இருந்தது. 1897 ஆம் ஆண்டு விவேகானந்தரின் முக்கியச் சீடரான சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சென்னையில் ராமகிருஷ்ண மடத்தின் பணிகளுக்கு முன்பு இந்தச் சாலையில் உள்ள ‘ப்ளோரா காட்டேஜ்’ என்ற கட்டிடத்தில் தான் தங்கி இருந்தார். பின்னர் அன்னிபெசன்ட் அம்மையாரின் சேவைகளைப் போற்றும் வகையில் இந்தச் சாலைக்கு அவரின் பெயர் வைக்கப்பட்டது. அன்னிபெசன்ட் சாலையின் ஒரு பகுதியை நடிகர் சிவாஜி கணேசன் பெயரில் மாற்றலாம் என்று சென்னை மாநகராட்சி முடிவு எடுத்தது ,இருந்தாலும் அன்னி பெசன்ட் பெயரை மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்தச் சாலையின் தொடக்கத்தில் மெரினா கடற்கரை சந்திப்பில் அன்னிபெசன்ட் பூங்கா மற்றும் அவரின் சிலை அமைந்துள்ளது. தற்போது இந்தப் பகுதியில் பரபரப்பாக இயங்கக்கூடிய வணிக நிறுவனங்கள் திருவல்லிக்கேணி ராயப்பேட்டை பகுதியை இணைக்கும் முக்கியமான போக்குவரத்துச் சாலையாக இருக்கிறது என்பதை வாசித்துக் கொண்டே அவரின் பிறப்பு இறப்பைப் பற்றிப் படிக்க ஆரம்பித்தான்.

‘அன்னிபெசன்ட் அம்மையார். 1847 அக்டோபர் 1ஆம் தேதி இங்கிலாந்தில் லண்டனில் பிறந்தார் இவரது இயற்பெயர் அன்னி வுட். 1933 செப்டம்பர் 20ஆம் தேதி தன்னுடைய 85 வயதில் சென்னை அடையாறில் இறந்தார்.

1867 ஆம் ஆண்டு, பிராங் பெசன்ட் என்ற மத குருவை மணந்தார். திருமணத்திற்கு முன்பு அன்னி வுட், திருமணத்திற்கு பிறகு அன்னி பெசன்ட் என்று அழைக்கப்பட்டார். மதக் கருத்துக்களில் ஏற்பட்ட முரண்பாடு, கருத்து வேறுபாடு காரணமாக 1873ல் இருவரும் சட்டப்பூர்வமாகப் பிரிந்தனர். இவருக்கு இரு பிள்ளைகள் பிறந்தனர். முதலில் ஆர்தர் திக்பி பெசன்ட் 1869ஆம் ஆண்டு பிறந்தார். 1870ஆம் ஆண்டு மேபெல் பெசன்ட் பிறந்தார். முதலில் அன்னி பெசன்ட் அம்மையாரின் பராமரிப்பில் குழந்தைகள் வளர்ந்தனர். பின்னர் அவர் சமூக ஈடுபாடுகளில் ஈடுபட்டதால், அவர்களின் தந்தையின் பராமரிப்பில் இருந்தார்கள். பின்னர் அன்னி பெசன்டிடம் வந்தனர். அன்னி பெசன்ட் பிற்காலத்தில் இந்தியா வந்த போது ஜே. கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது சகோதரர் நித்யானந்தா ஆகியோரைத் தத்தெடுத்து வளர்த்தார். ஜே. கிருஷ்ணமூர்த்தி உலகப் போதகரானார் ‘

‘அன்னி பெசன்ட் 1893 ஆம் ஆண்டு பிரம்ம ஞான சபையின் பணிகளுக்காக இந்தியா வந்தவர். இந்தியாவைத் தன் தாய் நாடாகக் கருதி சுதந்திரத்திற்காகப் போராடினார். 1916 ஆம் ஆண்டு சென்னையில் ஹோம் ரூல் எனப்படும் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார். 1917 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாரணாசியில் மத்திய இந்துக் கல்லூரியைத் தற்போது பனாரஸ் என்ற பல்கலைக்கழகத்தை நிறுவினார். சென்னையில் அடையாறு பகுதியில் பல கல்வி நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார்’

‘இந்தச் சாலை திருவல்லிக்கேணி மற்றும் ராயப்பேட்டையை இணைக்கிறது. ஒரு புறம் பார்த்தசாரதி கோயில், பாரம்பரிய அக்ரஹார வீடுகள். மறுபுறம் ஆற்காடு நவாப்புகளின் வரலாற்று மஹால் மத நல்லிணக்கத்திற்குச் சான்றாக இருக்கிறது. அன்னிபெசன்ட் அம்மையாரை இந்தியர்கள் அன்போடு வசந்தா என்று அழைத்தனர். சுதந்திரப் போராட்ட களத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் தொடங்கிய தன்னாட்சி இயக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் ஊர்வலங்கள் இந்தச் சாலை வழியாகவும் அருகில் உள்ள கோகலே ஹால் போன்ற இடங்களிலும் நடந்துள்ளது. மெரினா கடற்கரைச் சந்திப்பில் 2010 ஆம் ஆண்டு ‘பக்கிங்ஹாம் கால்வாய் மீனவர்கள்’ என்ற கருப்பொருளைக் கொண்ட ஒரு படகுச் சிற்பம் நிறுவப்பட்டது.

’19ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்படும் பனிக்கட்டிகளைச் சேமித்து வைப்பதற்காக மெரினாவில் கட்டப்பட்ட ஐஸ் ஹவுஸ் கட்டிடத்திற்கு செல்லும் முதன்மை பாதையாக இருந்தது இந்தச் சாலை. 1897ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் இங்கு தங்கிய பிறகு இக்கட்டிடம் விவேகானந்தர் இல்லம் என்று பெயர் பெற்றது ‘

‘டாக்டர் அன்னி பெசன்ட் சாலை மற்றும் காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லம் (பழைய ஐஸ் ஹவுஸ்) அன்னிபெசன்ட் பூங்கா சந்திப்பில் ஆரம்பிக்கிறது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்பில் முடிகிறது ‘

‘இந்தியக் கலாச்சாரத்தின் மீது அன்னி பெசன்ட் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக ‘ வசந்தா ‘ என்று இந்தியர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் நடத்திய வசந்தா அச்சகம் சென்னையில் மிகவும் புகழ் பெற்றது ‘

‘இந்தச் சாலையில் விவேகானந்தர் இல்லம். மீர்பேட்டை மார்க்கெட். சார்மினர் பிரியாணி சென்டர், NKT பெண்கள் மேல்நிலைப்பள்ளி. அமீர் மஹால் மற்றும் வணிக நிறுவனங்கள் இருக்கின்றன. சென்னையில் மையப் பகுதியில் பெசன்ட் சாலை அமைந்திருப்பதால் ,சென்னை மத்திய ரயில் நிலையம் எழும்பூர் போன்ற இடங்களுக்கு எளிதாகச் செல்ல முடியும் என்ற டாக்டர் பெசன்ட் சாலையை முழுவதும் படித்த ஆரோக்கியசாமி, அன்னி பெசன்ட் வாழ்க்கை வரலாற்றையும், பெசன்ட் சாலையின் வரலாற்றையும் அறிந்து கொண்டான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *