கதைகள் சிறுகதை

சிறுகதை … அரத்தூண் சாலை…!

Makkal Kural Official

ராஜா செல்லமுத்து

வடசென்னைக்கு வந்த தாமோதரனுக்கு ராயபுரத்தில் உள்ள அரத்தூண் சாலை என்ற பெயரைப் பார்த்ததும், அவன் படித்தது ஞாபகத்திற்கு வந்தது.

‘இந்த அரத்தூண் சாலை 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது அரத்தூண் என்ற பெயர் ஆர்மீனியர்களின் கல் தூண் அல்லது அரண்மனையிலிருந்து வந்திருக்கலாம்.ஆங்கிலேயர்கள் மெட்ராஸ் நகரத்தை நிறுவிய போது, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளையர் நகரம் என்றும் வடக்கு பகுதிகள் ஜார்ஜ் டவுன் – ராயபுரம் உட்பட கருப்பர் நகரம் என்றும் அழைக்கப்பட்டது.

ராயபுரம் என்ற பெயர் ராயன் என்ற தோட்டத்தில் இருந்து வந்திருக்கலாம் அல்லது செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் தமிழ்ப் பெயரான ராயப்பா என்பதில் இருந்து வந்திருக்கலாம் அல்லது விஜயநகரப் பேரரசு, அரசர், செல்வந்தர் என்ற பெயரில் வைத்திருக்கலாம். ராயபுரம் சென்னையில் பழமையான மீனவக் கிராமங்களில் ஒன்றாக இருக்கிறது. அது வணிக மையமாக இருந்தபோதிலும் சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் கடலோரச் சமூகத்துடன் நெருங்கிய தொடர்புடன் உள்ளது.

அரத்தூண் சாலை 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சென்னையில் வாழ்ந்து வந்த ஆர்மீனிய வணிகரான ஜான் அரத் தூண் என்பவரின் குடும்பப் பெயரால் அழைக்கப்படுகிறது.

18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஆர்மீனியச் சமூகத்தினர் தங்கள் வியாபாரத்திற்காக சென்னைக்கு வந்தாலும் அவர்கள் தங்கள் மத மற்றும் சமூக வாழ்க்கையில் உறுதியாக இருந்தனர் . ஜார்ஜ் டவுனில் உள்ள ஆர்மீனியர் சர்ச் பெரும் வழிபாட்டுத்தலமாக இல்லாமல் சமூகச் சந்திப்பு மையமாகவும் அவர்களின் பதிவேடுகள் பிறப்பு ,இறப்பு திருமணம் பராமரிக்கப்படும் இடமாகவும் இருந்தது.

அரத்தூண் குடும்பத்தினர் உட்பட முக்கிய ஆர்மீனியக் குடும்பங்கள் இந்த தேவாலயத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். அரத்தூண் சாலையில் இன்றும் காணப்படும் சில பழங்கால வீடுகள் 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியின் காலனித்துவ கட்டிடப் பாணியைக் கொண்டுள்ளது .இந்த வீடுகளில் பெரும்பாலும் விசாலமான திண்ணைகள் உயரமான கூரைகள் மற்றும் காற்றோட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஜன்னல்களைக் கொண்டிருந்தது. இது அக்கால வாழ்க்கை முறை மற்றும் காலநிலைக்கேற்ற மாதிரி கட்டப்பட்டது. காலப்போக்கில் பழைய வீடுகள் இடிக்கப்பட்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் நவீன வளாகங்கள் கட்டப்பட்டு விட்டன.

நூற்றாண்டு முற்பகுதியில் சென்னையில் வாழ்ந்த ஆர்மீனிய வணிகர் ஜான் அரத்தூண் மற்றும் அவரது மகன் ஆல்பர்ட் ஜான் ஃபிடல் லெஸ் அரத்தூண் (1826–1877) இருவரின் ஒரு பெயராக இருக்கலாம். ஜான் அரத்தூண் 1819–ம் ஆண்டு செயின்ட் மேரி ஆஃப் தி ஏஞ்சல்ஸ் (தற்போது ஜார்ஜ் டவுனில் உள்ள இணைப் பேராலயம்) தேவாலயத்தில் மார்கரெட் பாபூம் என்ற சீனப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர் கிரிகோரி, பாபூம், இந்தியா, ஹாங்காங், மக்காவ், மணிலா இடையே வர்த்தம் செய்த வணிகர் இவர். உயர்ந்த கற்கள் வியாபாரத்தில் ஈடுபட்டவர். இவருக்கு எலிசா, ஆர்பர்ட் ஃ பிடெலியஸ் பெலிக்ஸ், ஜோசபின் என்ற குழந்தைகள் இருந்தார்கள். இதில் மூன்றாவது குழந்தை இள வயதில் இறந்தது. சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

ஜான் அரத்தூண் மகன் ஃபெலிக்ஸ் அயர்லாந்தில் உள்ள தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவதற்கான தான் சம்பாதித்த பெரும் செல்வத்துடன் மெகாங் என்ற கப்பலில் பயணித்திருக்கிறார். அந்தக் கப்பல் 1877–ம் ஆண்டு ஏடன் வளைகுடாவில் கார்டா ஃ புய் அருகே மூழ்கியது. ராயபுரம் வடக்கு சென்னைப் பகுதி, தெற்கு சென்னையின் புதிய பகுதியை ஒப்பிடும்போது பல நூற்றாண்டுகளாக இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பகுதி ஒரு காலத்தில் ஆங்கிலாே -– இந்திய சமூகத்தின் வாழ்விடமாக இருந்திருக்கிறது.

சென்னை முன்னாள் மெட்ராஸ் நகரின் ஆரம்ப காலங்களில் மறக்கப்பட்ட ஒரு கலாச்சாரப் பாரம்பரியத்தின் சாட்சியாக இருக்கிறது.

அரத்தூண் சாலை என்பது வெறும் சாலையின் பெயர் மட்டும் அல்ல. ஆர்மீனியச் சமூகத்துடனான சென்னையின் தொடர்பை நினைவுபடுத்துகிறது.தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ராயபுரம் ரயில் நிலையம் பகுதிக்கு அருகில் அமைந்தது 1856–ம் ஆண்டு ராயபுரம் to வாலாஜாபாத் வரை சேவை தொடங்கியது.

ராயபுரத்தில் உள்ள நெருப்புக் கோயில் ஜல் பிரோஸ் கிளப்வாலா தார்–இ– மெஹர் என்று அழைக்கப்படும் புகழ் பெற்ற ஆட்சி மத வழிபாட்டுத் தலம் இது தமிழ்நாட்டில் உள்ள ஒரே பார்சி நெருப்புக்கோயில்.1910–ம் ஆண்டு ஆகஸ்ட் 7–ம் தேதி இந்தக் கோயில் கட்டப்பட்டது. இது அரத் தூண் சாலையில் அமைந்துள்ளது. பிரோஜ் எம்.கிளப்வாலா என்பவரின் தன் இள வயது மகன் ஜல் என்பவரின் நினைவாக இந்தக் கோயில் கட்டப்பட்டது. நிலமும் பெரும் நன்கொடையும் வழங்கினார்.

இந்தக் கோயில் கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை அங்கு ஏற்றப்பட்ட புனித நெருப்பு இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குருமார்கள் ஒரு நாளைக்கு ஐந்து முறை இந்த விளக்கைப் பேணுகிறார்கள் முதலாம் உலகப் போரின் போது ஜெர்மன் கப்பலான எம் எஸ் எஸ் எம்டன் சென்னை நகரைத் தாக்கிய போது மக்கள் அனைவரும் ராயபுரத்தை விட்டு வெளியேறினார்கள்.

கோயில் அர்ச்சகர் மட்டும் நெருப்பணைந்து விடக்கூடாது என்று கோயிலேயே தங்கியிருந்தார் .இந்த வழிபாட்டுத் தலத்தின் கருவறைக்குள் பார்சி மற்றும் ரானி ஜோராஸ்டிரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த நெருப்புக் கோயில் சென்னையில் பன்முகக் கலாச்சாரப் பாரம்பரியத்தில் ஒரு முக்கிய அடையாளமாக இருக்கிறது.

2010–ம் ஆண்டில் லூசி அரத்தூண், ஜான் அத்தூணின் கொள்ளுப்பேத்தி மெட்ராஸில் உள்ள தங்கள் குடும்பத்தவர்களை தேடி குவாத்தமாலாவிலிருந்து சென்னைக்கு வந்துள்ளார். அப்போது சாலையின் பெயர் குறித்து, வரலாற்று ஆய்வாளர் திரு. முத்தையா அவர்களைச் சந்தித்து பேசியதாக ‘தி இந்து’ பத்திரிகை கட்டுரை வெளியிட்டது

அரத்தூண் சாலையில் ராயபுரம் மார்க்கெட் முக்கிய அடையாளமாக இருக்கிறது .இந்தச் சந்தை தினசரி தேவைகள் காய்கறிகள் மற்றும் பொருட்களுக்கான பரபரப்பு வணிக மையமாக இருக்கிறது. மங்களம் இது நன்கு அறியப்பட்ட மளிகை கடை. நிஜாம் பிரியாணி புகழ்பெற்ற இந்த உணவகமும் இந்தச் சாலையில் உள்ளது. திருத்தங்கல் நாடார் கல்யாண மண்டபம் இந்த பகுதியில் ஒரு பிரபலமான மண்டபமாக இருக்கிறது.

நவீன் ஆர்.பி. இன் கிளப் குடியிருப்பு பகுதி இங்கு உள்ளது. அரத்தூண் சாலைக்கு மிக அருகில் ஸ்டாலின் மருத்துவ கல்லூரி உள்ளது. ஜெயின் அண்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஜெயின் பீட்டர்ஸ் தேவாலயம், அரத்தூண் சாலைக்கு மிக அருகில் உள்ள தேவாலயம் இந்தப் பகுதி ஆங்கிலாே – இந்தியச் சமூகத்தின் வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மசூதி–இ–கதீம் என்ற பழமையான முஸ்லிம் கல்லறை அலுவலகம் மற்றும் மசூதியும் இருக்கிறது” என்று படித்ததை எல்லாம் நினைத்துக் கொண்டே வட சென்னையின் வாடையே அறியாத தாமோதரன் ராயபுரத்திற்குள் நுழைந்தான். ராயபுரம் பற்றிய பிரமிப்பு , அக்கால வரலாறு, ஆங்கிலோ – இந்திய மக்கள் வாழ்வு, ஆர்மீனிய மக்களின் நாகரீகம் அத்தனையும் தாங்கி நின்றது, அரத்தூண் சாலை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *