செய்திகள்

சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் த.வெ.க. 16-ந்தேதி ஆர்ப்பாட்டம்

Makkal Kural Official

சென்னை, நவ.14-

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து த.வெ.க. சார்பில் 16-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடந்து வருகிறது. தமிழகத்திலும் இந்த பணி தொடங்கி நடந்து வருகிறது. வீடு, வீடாக ஊழியர்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள். ஆனால், இந்த சிறப்பு திருத்த பணியில் குழப்பங்கள் இருப்பதாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. இந்த தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் அறிவித்து போராடி வருகின்றன.

அந்தவகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ.க. சார்பில் வரும் 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது. மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் தலைமை தாங்குகிறார்கள்.

சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்க இருக்கிறார். இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு இ–மெயில் மூலம் உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கியுள்ளது.

குறிப்பாக, போலீசார் அனுமதி அளிக்கும் இடத்தில் மட்டும் தான் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும், எக்காரணத்தை கொண்டும் பொதுமக்களுக்கும், சாலை போக்குவரத்திற்கும் இடையூறு விளைவிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்ட விவரங்களை உடனுக்குடன் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *