செய்திகள்

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 3 அமெரிக்கர்கள் பலி

Makkal Kural Official

டமாஸ்கஸ், டிச. 14–

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிரியாவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2 பேர், ஒரு மொழிப்பெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி அகமது அல்-ஷரா, வெள்ளை மாளிகையில் சில வாரங்களுக்கு முன் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடவடிக்கை குறித்து இருநாட்டு தலைவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, எங்கள் மீதும், சிரியா மீதும் ஐஎஸ்ஐஎஸ். தொடுத்த தாக்குதல் இது. உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கின்றோம். அவர்களுக்காகவும், அவர்களின் பெற்றோர் மற்றும் அன்புக்கு உரியவர்களுக்காகவும் நாங்கள் வேண்டி கொள்கிறோம் என கூறினார். இதற்கு நாங்கள் பதிலடி தருவோம் என டிரம்ப் சூளுரைத்து உள்ளார்.

காயமடைந்த அவர்கள் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வருகின்றனர்.

இந்த தாக்குதலை நடத்திய தனிநபர் ஒருவர் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டு விட்டார். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *