செய்திகள்

சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

Makkal Kural Official

சென்னை, நவ. 24:

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று த.வெ.க. நிர்வாகிகள் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27–ந் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்ஸுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே சென்னை பனையூர் அலுவலகத்தில் சிபிஐ காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது நிர்வாகிகளை கரூர் வரவழைத்து நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *