செய்திகள்

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Makkal Kural Official

சிதம்பரம், டிச. 8–

சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி – -2025 பள்ளியின் தாளாளர் சா.குமார், துணைத் தாளாளர் ஏ.ரூபியால் ராணி மற்றும் பள்ளியின் முதல்வர் எஸ்.லியோ பெஸ்கி ராவ் முன்னிலையில் சிறப்பாக தொடங்கப்பட்டது.

பல துறைகளின் அறிவுத் திறன்களை ஒரே மேடையில் வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இக்கண்காட்சி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டைப் பெற்றது. கண்காட்சியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பல பிரிவுகளில் மாணவர்கள் செயல்பாட்டு மாதிரிகள், தொழில்நுட்பக் காட்சிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை சிறப்பாகத் தயாரித்து காட்சிப்படுத்தினர். பரதநாட்டியக் கலைஞர்கள் மற்றும் சிலம்பக் கலைஞர்கள் தங்கள் துறைகளின் பெருமையைப் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் வெளிப்படுத்தும் வகையில் பழமையான பொருட்களைக் காட்சிப்படுத்தியும், அதன் மகத்துவம் மற்றும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தனர்.

கண்காட்சியின் ஒரு பகுதியாக மிருகக்காட்சி சாலை மாதிரி அமைக்கப்பட்டதைக் கண்டு மாணவர்கள் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் வெளிப்படுத்திய திறமைகள் மற்றும் உழைப்பைக் கண்டு மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *