செய்திகள்

சிதம்பரத்தில் பேரிடர் மேலாண்மை திட்ட பயிற்சி தொடக்க விழா

Makkal Kural Official

சிதம்பரம், நவ. 23:

சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவன பயிற்சி நிறுவனத்தில் கிராமங்களில் செயல்படுத்தவுள்ள பேரிடர் மேலாண்மை திட்ட பயிற்சி தொடக்கவிழா நடைபெற்றது.

சிதம்பரம் கிரீடு தொண்டு நிறுவனம் மற்றும் மும்பை ரிலையன்ஸ் பவுன்டேஷேன் மும்பை இணைந்து கடலூர் மற்றும் நாகபட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள சுமார் 100 கிராமங்களின் பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திட்டத்தின் கீழ் பேரிடர் அபாயக் குறைப்பு, பேரிடர் தயார்நிலை, பேரிடர் மீப்பு நடவடிக்கை ஆகிய திட்டப்பணிகளை மேற்கண்ட கிராமங்களில் செயல்படுத்ததுவது குறித்து திட்டத்தில் பணிபுரியவுள்ள சுமார் 50 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை ரிலையன்ஸ் பவுன்ஷேன் சார்பாக கலந்து கொண்ட பேரிடர் மேலாண்மை திட்ட அலுவலர் அருனிமா பயிற்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். கிரீடு தொண்டு நிறுவன நிறுவனர் மற்றும் தலைவர் நடனசபாபதி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். அவர் தம் சிறப்புரையில் கிரீடு நிறுவனத்தின் பேரிடர் மேலாண்மையில் கடந்த காலங்களில் சுனாமி, வெள்ளப்பாதிப்பு, கஜா மற்றம் தானே புயல் பாதிப்பில் கிரீடு நிறுவனத்தின் சிறப்பான பணிகளைப்பற்றி பணியாளர்களுக்கு எடுத்து கூறப்பட்டது. மேலும் வரக்கூடிய கால கட்டங்களில் பேரிடருக்கு முன்பாக மக்களை தயார் செய்வதுபற்றியும், பேரிடர் பாதிப்புகளை எவ்வாறு குறைப்பது என்பது பற்றியும் பள்ளி குழந்தைகள் மத்தியில் பேரிடர்கால பாதுகாப்பு திட்டங்களை உருவாக்குதல் பற்றியும் மற்றும் பேரிடர் காலங்களில் காலநடைகள் பாதிப்பதை எவ்வாறு தடுப்பது போன்ற பணிகளைப்பற்றி எடுத்துரைத்தார்.

முன்னதாக திட்ட அலுவலர் நீலகண்டன் வரவேற்றார். முடிவில் திட்டமேலாளர் முகமதுகாதர் நன்றி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *