சிதம்பரம், நவ. 18–
கடலூர் மாவட்ட சதுரங்க சங்கத்துடன் இணைந்து கேஏஎப்டி செஸ் அகாடமி சார்பில் முதலாவது சிதம்பரம் தாலுகா அளவிலான திறந்தநிலை சதுரங்கப் போட்டி – 2025 சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தாலுகா அளவிலான சதுரங்கப் போட்டியில் மாவட்டம் முழுவதிலுமிருந்து ஏராளமான இளம் சதுரங்க வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது அபாரமான திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக, போட்டியை நடத்திய பள்ளி வளாகத்தைச் சேர்ந்த வீனஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் மாணவ மாணவிகள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பதக்கங்கள் மற்றும் காசோலைகளை வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை, வீனஸ் குழுமப் பள்ளிகளின் நிறுவனர் வீனஸ் எஸ்.குமார் , பள்ளியின் முதல்வர் நரேந்திரன் மற்றும் நிர்வாக அலுவலர் ரூபி கிரேஸ் பொனிகலா ஆகியோர் பாராட்டினார்கள்.
இந்தப் போட்டி அப்பகுதியில் உள்ள இளம் வீரர்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் வகையில் அமைந்தது.
![]()





