சென்னை, ஆக.1–
மடப்பு ஆண்டு ஜூன் மாதத்தோடு முடிந்த காலாண்டில் சிட்டி யூனியன் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,849 கோடியாக உயர்ந்துள்ளது.
இது குறித்து வங்கியின் நிர்வாக இயக்குனரும் முதன்மை செயல் இயக்குநருமான என். காமகோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:–
மொத்த வர்த்தகம் 18% உயர்ந்து ரூ.1,19,754 கோடியாக அதிகரித்து உள்ளது. வங்கியின் வைப்பு தொகை 20% உயர்ந்து ரூ.65 ஆயிரத்து 734 கோடியாகவும், கடன்கள் கடந்த ஆண்டை விட 16% உயர்ந்து ரூ.54 ஆயிரத்து 20 கோடியாகவும் உள்ளது.
வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.306 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருமானம் ரூ.625 கோடியாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய 2024–-25–ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகம். அப்போது வங்கி ரூ.264 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.1,580 கோடியிலிருந்து ரூ.1,849 கோடியாக உயர்ந்துள்ளது. வட்டி வருவாய் ரூ.1,388 கோடியிலிருந்து ரூ.1,605 கோடியாக அதிகரித்துள்ளது.
நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த மதிப்பான ரூ.9417 கோடியில் இருந்து ரூ.9 ஆயிரத்து 686 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி இன்று வரை 876 கிளைகள் மற்றும் 1776 தானியங்கி பட்டுவாடா இயந்திரங்களையும் கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஓராண்டுக்கு முன்னர் 3.88 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்த ஜூன் இறுதியில் 2.99 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.’’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![]()





