செய்திகள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: திருப்பத்தூரில் கலெக்டர் துவக்கி வைத்தார்

Makkal Kural Official

திருப்பத்தூர், ஜன.20–

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்துத் துறை சார்பாக, நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து, சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலைக்கவசம் அணிவது குறித்தும், சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சிவசௌந்திரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

37வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, 1.1.2026 முதல் 31.1.2026 வரை சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதை முன்னிட்டு இன்றைய தினம் போக்குவரத்துத் துறை சார்பாக, நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தலைக்கவசம் அணிவது குறித்தும், சீட் பெல்ட் அணிவது குறித்தும் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சிவசௌந்திரவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தது. இப்பேரணியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி வாகனங்கள், வாகன விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வினில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் முரளி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் பன்னீர்செல்வம் (திருப்பத்தூர்), வெங்கடராகவன் (வணியம்பாடி), மோட்டார் ஆய்வாளர்கள் முரளி, அமர்நாத், காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *