செய்திகள்

சாலையில் கிடந்த 45 சவரன் நகைகளை போலீசிடம் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளரின் நேர்மை: லலிதா ஜுவல்லரி அதிபர் எம். கிரண் குமார் பாராட்டு

Makkal Kural Official

சென்னை, ஜன. 17–

நேர்மையை போற்றிய லலிதா ஜுவல்லரி அதிபர் சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளரான பத்மா, சென்னை தி.நகர் சாலையில் யாரும் கவனிக்காமல் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்தார். அதற்காக லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் டாக்டர் எம். கிரண் குமார், அவரை வீட்டிற்கு அழைத்து கௌரவித்தார்.

“இத்தகைய மனிதர்களே நமது சமுதாயத்தின் முன்மாதிரிகள். அவர்களை கௌரவித்து கொண்டாடுவது நமது கடமை,” என்று கூறிய அவர், தனது பாராட்டின் அடையாளமாக ஒரு வெள்ளித் தட்டைப் பரிசாகவும் வழங்கினார்.

“இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வதற்கு மிகுந்த நேர்மையும், உண்மையும் தேவை. இவ்வளவு உயர்ந்த பண்புகள் கொண்ட ஒருவரை வீட்டிற்கு அழைத்து சந்தித்தது, எனக்கு தனிப்பட்ட முறையில் பெருமையாக உள்ளது” என்று கிரண் குமார் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *