சென்னை, ஜூலை 16–
சாலையில் கிடந்த ரூ. 1.46 லட்சத்தை காவல் நிலையத்தை ஒப்படைத்த நண்பர்கள் 2 பேரை கமிஷனர் அருண் நேரில் அழைத்து பாராட்டினார்.
கோயம்பேடு காவல் நிலைய எல்லையில் திருடிச் சென்ற காரை, வளசரவாக்கம் பகுதியில் வாகனத் தணிக்கையில் பிடித்த காவல் குழுவினர் மற்றும் சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த 2 நபர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சென்னை கோயம்பேடு பகுதியில் சுரேஷ்குமார் என்பவரது கால் டாக்சியி பயணித்த முகமது அஜ்மல் என்பவர் சிறிது நேரத்தில் மயக்கம் வருவது போல உள்ளது குடிக்க தண்ணீர் வேண்டும் கடையின் அருகில் நிறுத்துங்கள் என கூறியுள்ளார். உடனே, கால் டாக்சி ஓட்டுநர் சுரேஷ்குமார், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு கடையின் அருகில் காரை நிறுத்திவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதற்குள் வாடிக்கையாளராக வந்த முகமது அஜ்மல் என்பவர் மேற்படி கால் டாக்சி காரை திருடிச் சென்றுவிட்டார்.
இது குறித்து சுரேஷ்குமார் கோயம்பேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் விசாரணை செய்து, காரின் பதிவெண் மற்றும் அடையாளங்கடன் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தனர். வளசரவாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலர் எம்.முத்துராஜா, காவலர்கள் எம்.பிரவீன்குமார் மற்றும் ஏ.பெருமாள் ஆகியோர் மேற்படி திருடப்பட்ட கால் டாக்சியை மடக்கி நிறுத்தி, தப்ப முயன்ற எதிரி முகமது அஜ்மலை பிடித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ரூ. 1.46 லட்சம் உரியவர்களிடம்
ஒப்படைப்பு
தனியார் செய்தி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வரும் மைக்கேல் தனது நண்பர் ஜுட் ராபர்ட் கார்லஸ் (எ) ஜோயல் என்பவருடன் 12–ந் தேதி இருசக்கர வாகனத்தில் கோடம்பாக்கம் பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, அங்கு சாலையில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு, கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்த போது அதில் பணம் ரூபாய். 1,46,500/- பணம் இருந்தது தெரியவந்தது. உடனே, இருவரும் மேற்படி பணம் அடங்கிய பையை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்கும்படி தெரிவித்தனர்.
சிறப்பாக செயல்பட்டு காரை திருடிச் சென்ற நபரை சில மணி நேரங்களில் பிடித்து காரை மீட்ட காவல் குழுவினர் மற்றும் சாலையில் கிடந்த பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த மைக்கேல் மற்றும் ஜுட் ராபர்டோ கார்லஸ் (எ) ஜோயல் ஆகியோரை சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் ஆ.அருண் நேரில் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.
![]()





