செய்திகள்

சாத்தூர் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது விபத்து: 3 பேர் பலி

Makkal Kural Official

சாத்தூர், ஆக. 9–

சாத்தூர் அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் என்ற இடத்தில் வீடு ஒன்றில் சிலர் பட்டாசு தயாரித்தனர். அப்போது, வெடி மருந்துகள் திடீரென வெடித்ததில் தீப்பற்றி கொண்டது. அது மளமளவென பரவி பட்டாசுகள் வெடித்து சிதறின.

இந்த சம்பவத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்வரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட 4 வெடிவிபத்துகளில் 16 பேர் உயிரிழந்தது குறி்ப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *