செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

Makkal Kural Official

சாத்தூர், செப். 3–

சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. 40-க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு அறையில் மேற்கூரை மட்டும் இடிந்து தரைமட்டமாகி சேதம் அடைந்துள்ளது.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்த வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, சிவகாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் யாரேனும் காயம் அடைந்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *