சென்னை, நவ. 18–
சபரிமலை ஸ்ரீதர்ம சாஸ்தா (ஐயப்பன்) கோயிலில் மண்டல பூஜை நேற்று (17–ந் தேதி) முதல் 27–ந் தேதி வரையும், மகரவிளக்கு ஜோதி திருவிழா டிசம்பர் 30ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 19ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு சபரிமலை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திலும், மாநில எல்லையான களியக்காவிளையிலும், கேரள மாநிலம்-சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகவல் மையங்கள் ஜனவரி 20ந் தேதி வரை செயல்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், களியக்காவிளை தகவல் மையத்தினை 94880 73779, 94862 70443, 94428 72911 ஆகிய எண்களில் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் மையத்தினை 94439 94342, 63858 06900, 85310 70571, 83440 21828, 70949 06442, 75588 39969, 89219 37043, 90806 50431, 99405 76898, 98433 70229, 99425 05466, 84384 44770 ஆகிய எண்களில் உள்ள அலுவலர்களிடம் தகவல்களை அறிந்து கொள்ளலாம். இத்தகவல் மையங்களின் சேவையினை தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
![]()





