செய்திகள்

சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா

Makkal Kural Official

புட்டபர்த்தி, நவ. 23:

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100வது பிறந்தநாள் விழா இன்று புட்டபர்த்தி பிரசாந்தி மந்திரில் பாபாவின் ஸ்வர்ண ரதோத்சவத்துடன் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து ஸ்ரீ சத்ய சாய் மாணவர்களின் வேதம் மந்திர பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் பஜனைகளும் மங்கள ஆரத்தியும் நடைபெற்றது. எஸ்எஸ்எஸ்சிடி நிர்வாக அறங்காவலர் ஆர்ஜெ ரத்னாகர், அனைத்து பிரமுகர்கள் மற்றும் பக்தர்களையும் அன்புடன் வரவேற்றார். விழாவில் தமிழக மற்றும் கர்நாடகாவின் பால் விகாஸ் மாணவர்களின் அழகான கலாசார விளக்கக்காட்சிகள் கொண்டாட்டங்களுக்கு பக்தி துடிப்பை சேர்த்தது.

விழாவில் தலைமை விருந்தினரான இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். ஆந்திர அரசின் அமைச்சர் நாரா லோகேஷ், தெலுங்கானாவின் முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திராவின் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளனர். விழாவில் உலகெங்கிலும் உள்ள 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பக்தர்கள்கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *