சென்னை, ஜன. 27:
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க.வுக்கு இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் (தமிழக விவசாயிகள் சங்கம்) மாநிலத் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் தலைமையில், அக்கட்சியின் மாநில செயலாளர் விஜயகுமார், துணைத்தலைவர் பொன்.மாணிக்கம், இணைச்செயலாளர் பரந்தாமன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆஞ்சநேயலு, நிதி காப்பாளர் மு.ஹரிகரன், இளைஞர் அணித் தலைவர் ஆரணி வேலன், சென்னை மண்டலத் தலைவர் ராஜா, இளைஞர் அணிச் செயலாளர் வாஜ்பாய் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அண்ணா தி.மு.க.விற்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.
இதேபோன்று, தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்க கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் தங்கராஜ், பொதுச் செயலாளர் டாக்டர் பொன்ராஜ், பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, தங்களது கூட்டமைப்பின் முழு ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.
![]()





