சென்னை, ஜன. 4:
சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட அண்ணா தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு வருகிற 9ந் தேதி தொடங்கி 5 நாட்கள் நேர்காணல் நடக்கிறது.
இது தொடர்பாக அண்ணா தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத்தேர்தல்களில், அண்ணா தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவர்களுடனான நேர்காணல், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகம் எம்.ஜி.ஆர். மாளிகையில் வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. காலை 9.30 மணியில் மாலை 6.15 மணி வரை நடக்கிறது.
அதன்படி 9-ந் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, நீலகிரி, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு, நாமக்கல், சேலம் மாநகர் மற்றும் மாலை 4 மணி முதல் 6.15 மணி வரை சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு.
10-ந் தேதி காலை 9.30 மணி முதல் கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தஞ்சை கிழக்கு, தஞ்சை மேற்கு, தஞ்சை மத்தியம், தஞ்சை தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை மாநகர், நெல்லை புறநகர், விருதுநகர் கிழக்கு மற்றும் மாலை 4 மணி முதல் திருவாரூர், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, தேனி கிழக்கு, தேனி மேற்கு, புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு.
11-ந்தேதி காலை விருதுநகர் மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, கடலூர் மேற்கு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி புறநகர் வடக்கு மற்றும் மாலை திருச்சி மாநகர், திருச்சி புறநகர் தெற்கு, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி.
12-ந் தேதி காலை விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மற்றும் மாலை திருவண்ணாமலை கிழக்கு, திருவண்ணாமலை மத்தியம், வேலூர் மாநகர், வேலூர் புறநகர், ராணிப்பேட்டை கிழக்கு, ராணிப்பேட்டை மேற்கு, திருப்பத்தூர்.
13-ந் தேதி காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், 10.15 மணிக்கு திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, 11 மணி அளவில் காஞ்சீபுரம், 11.45 மணி அளவில் செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, பகல் 12.30 மணி அளவில் தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு), மாலை 4 மணி அளவில் புதுச்சேரி மாநிலம், கேரளா மாநிலம், 4.45 மணிக்கு சென்னை புறநகர், 5.30 மணிக்கு வடசென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு (கிழக்கு), வடசென்னை தெற்கு (மேற்கு).
இந்த நேர்காணலில், கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தொகுதி பற்றிய நிலவரங்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரங்களை அறிந்த ‘தங்களுக்காக விருப்ப மனு அளித்துள்ளவர்கள் மட்டும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல் வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()





