சென்னை, ஜன. 24–
சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதலமைச்சரின் பதிலுரையில் அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
இன்று காலை 9.30 மணிக்கு சபை கூடியது. மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் எஸ். காந்திராஜன் சமர்ப்பித்தார். அதே போல் அரசு உறுதிமொழிக் குழுவின் அறிக்கையை அதன் தலைவர் தி.வேல்முருகன் சமர்ப்பித்தார். பின்னர் அரசினர் சட்டமுன் வடிவுகள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை வழங்கினார்.
இன்று சட்டசபை நிகழ்ச்சிகளில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் ஒருவர் கூட சட்டசபைக்கு வரவில்லை. அதே போல் பா.ஜ.க. உறுப்பினர்கள் கலந்து கொள்ளாத நிலையில் முதலமைச்சர் பதிலுரை முடிந்த பின்னர் பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டார்.
![]()





