கோவை, நவ. 3–
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை விமான நிலையத்தின் பின்புறம், நேற்றிரவு தனது ஆண் நண்பருடன் கல்லூரி மாணவி பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் மாணவியை கடத்த முயற்சி செய்தனர். இதையடுத்து மாணவியின் ஆண் நண்பர், 3 பேரிடம் இருந்து காப்பாற்ற போராடி உள்ளார். 3 பேர் கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயங்கியுள்ளார். பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதையடுத்து, தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெளிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் முற்புதர் பகுதியில் அரைகுறை ஆடையுடன் கிடந்த கல்லூரி மாணவியை மீட்டுள்ளனர். உடனடியாக மாணவியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, 3 பேர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கோவை விமான நிலைய பகுதியில் கல்லுாரி மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
![]()





