திருப்போரூர், நவ. 28:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளையொட்டி கேளம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன், திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எஸ் எல்லப்பன் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேளம்பாக்கம் இளைஞர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் மதிப்பில் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவரும், வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான எஸ் ஆர் எல். இதயவர்மன் வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கேளம்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் கோவளம் செல்லும் மும்முனை சாலை சந்திப்பு அருகே தி.மு.க. கட்சியின் காஞ்சி வடக்கு மாவட்ட கழகம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி திமுக கிளை கழகம் மற்றும் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கேளம்பாக்கம் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் ராணிஎல்லப்பன் தலைமை தாங்கினார். திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஒருங்கிணைப்பாளரும், சாத்தாங்குப்பம் குடியிருப்போர் பகுதி நல சங்கத்தின் தலைவருமான கேளம்பாக்கம் எக்ஸ்பிரஸ் எஸ். எல்லப்பன் மற்றும் கட்சியினரும் கேளம்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்ற துணைத் தலைவருமான பாஸ்கரன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
கேளம்பாக்கம் கிளைக் கழக செயலாளர்களான தி.கா.பாளையம் ஏபிஎஸ் அசுந்தன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்கள். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் திருப்போரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய குழுபெருந் தலைவருமான எஸ்.ஆர்.எல். இதயவர்மன் கலந்து கொண்டு முதலாவதாக கேளம்பாக்கம் பகுதி இளைஞர்களுக்கு ரூபாய் 25,000ஆயிரம் மதிப்பிலான கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து சுமார் 10 கிலோ கேக்வெட்டி கொண்டாடி பின்பு சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரியாணி அறுசுவை உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கட்சியின் திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக துணைச்செயலாளர் வெண்மேடு இரமேஷ், திருப்போரூர் வடக்கு ஒன்றிய கழக இளைஞரணி துணை அமைப்பாளர் தையூர் மா. ஜெகன், முன்னாள் இளைஞர் அணி பொறுப்பாளர் கேளம்பாக்கம் திருமலை, ஒன்றிய பொறுப்பாளர்களான கார்த்திக், விஜயகுமார், 01வார்டு உறுப்பினர் விஜி (எ) கோதண்டராமன், கேளம்பாக்கம் கழக பூத் கமிட்டி பாகநிலை முகவர்களான ரெயின்ஷா, அப்துல்சுக்கூர், நிஷாந்தன், ஜாய் ஸ்டாலின், ஜோதி நகர் இரமேஷ், புவியரசன் மற்றும் நடராஜ், இரமேஷ், முருகேசன், ராஜசேகரன், பிரபாகரன் உள்ளிட்ட சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
![]()





