செய்திகள்

கெஜ்ரிவால் பிறந்தநாள்: ஸ்டாலின் வாழ்த்து

Makkal Kural Official

சென்னை, ஆக 16–

‘ஆம்ஆத்மி’ கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

‘‘ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்தோடு நீண்டகாலம் மக்கள் சேவையாற்றி, வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்.

பொதுமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தைத் தங்கள் தலைமைத்துவம் மேலும் வலுப்படுத்தட்டும்’’.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *