செய்திகள்

குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய 30 ஆண்டு தலைமறை குற்றவாளிகள் கைது

Makkal Kural Official

சென்னை, ஜூலை 2-–

இந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு, அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘பைப் குண்டு’ வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 1995-ம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டுவெடிப்பு வழக்கு, நாகூரில் தங்கம் முத்துகிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கு, 1999-ல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், திருச்சி, கோவை, கேரளா உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் வைத்த வழக்கு, 2011-ம் ஆண்டு மதுரை திருமங்கலம் அத்வானி ரதயாத்திரையின்போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2012-ம் ஆண்டு வேலூர் டாக்டர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு மற்றும் 2013-ம் ஆண்டு பெங்களூருவில் பாரதீய ஜனதா அலுவலகம் முன்பு குண்டு வெடித்த வழக்குகளில் முக்கிய தொடர்புடையவன் பயங்கரவாதி நாகூர் அபுபக்கர் சித்திக்.

இவர், இந்து முன்னணி அலுவலக வெடிகுண்டு அலுவலக வழக்கில் கைதானார். பின்னர் ஜாமீனில் வந்த அவர், போலீசார் கையில் சிக்காமல் தொடர்ந்து சதித்திட்டங்களை அரங்கேற்றி வந்தார். தொடர்ந்து 30 ஆண்டுகள் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இவருக்கு எதிராக கோர்ட் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தது.

அதேபோன்று 1999-ம் ஆண்டு தமிழகம் மற்றும் கேரளாவில் 7 இடங்களில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கின் முக்கிய குற்றவாளி நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது அலி என்கிற மன்சூர் என்பவரும் போலீசார் பிடியில் சிக்காமல் கடந்த 26 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இவருக்கு எதிராகவும் கோர்ட் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த 2 பயங்கரவாதிகளையும் தேடி கண்டுபிடிக்க தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் பல்வேறு தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பயங்கரவாதிகள் 2 பேரும் ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் பதுங்கி இருந்த தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவர்கள் 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் சென்னை அழைத்து வந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அவர்கள் 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து, விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *