செய்திகள்

குடும்ப தகராறு: சென்னை ஐகோர்ட் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை

Makkal Kural Official

விழுப்புரம், டிச. 14–

குடும்ப தகராறு காரணமாக சென்னை ஐகோர்ட் வக்கீல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோஷணை வெள்ளவாரி ரோடு பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் சாமிசந்திரன் (வயது 38), சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணி புரிந்து வந்தார். இவருக்கும் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த காமாட்சி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் கணவன்- – மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக காமாட்சி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சாமி சந்திரன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சாமி சந்திரன் வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிசந்திரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *