செய்திகள்

கீழ்பாக்கத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை: 2 பேர் கைது

Makkal Kural Official

சென்னை, நவ. 16–

கீழ்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை பெங்களூரிலிருந்து வாங்கி விற்பனைக்காக வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், கீழ்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கீழ்பாக்கம், வாசு தெருவில் கண்காணித்து, அங்கு நின்று கொண்டிருந்த 2 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் எனும் போதைப்பொருளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த உஸ்மான், பிரவீன் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 17 கிராம் எடை கொண்ட மெத்தம்பெட்டமைன் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய ஐபோன் உட்பட 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *