செய்திகள்

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள்: டிஎன்சிஏ தலைவர் சீனிவாசராவ், காசி விஸ்வநாதன் வழங்கின

Makkal Kural Official

வேலூர் நவ.24:

வேலூர் மாநகரில் நவீன வசதி கொண்ட கிரிக்கெட் மைதானம் கட்டி தர வேண்டும் என்று மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவரும், நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி. வி.சம்பத் கோரிக்கை வைத்தார்.

வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இணைந்து வேலூர் மாவட்ட கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடிவு செய்து, இந்த போட்டிகள் மாவட்ட தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான ஜி.வி.சம்பத் தலைமையில் வேலூரில் நடைப்பெற்றது. இதில் 17 அணிகள் பங்கேற்று இருந்தது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சி.எஸ்.கே அணி சி.இ.ஒ காசி விஸ்வநாதன் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் டி.ஜெ சீனிவாசராஜ் ஆகியோர் பங்கேற்று போட்டிகளை தொடக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கி சிறப்புறை ஆற்றினர்.

கிரிக்கெட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய சங்கத் தலைவர் ஜி.வி.சம்பத் பேசியதாவது:

கிரிக்கெட் விளையாட்டு இன்று எல்லோரும் பார்க்கும் விளையாட்டாக மாறிவிட்டது. இன்று வேலூர் மாநகரில் திறமையான கிரிக்கெட் வீரர்கள் அதிகமாக இருப்பதை அறிகிறேன். இவர்களின் திறமைகளை கொண்ட வரவே இந்த சங்கம் உருவாக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது புதிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்ட உள்ள டி.ஜெ.சீனிவாசராஜ் முதன் முதலில் வேலூருக்கு வந்து இந்தநிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் துணை தலைவர் எம்.குமரேஷ் கெளரவ செயலாளர் யு. பகவான் தாஸ் ராவ், இணை செயலாளர் சி.மாரி ஸ்வரன் மற்றும் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். வேலூரில் கிரிக்கெட் விளையாட்டு மேம்பட ஒரு நவீன கிரிக்கெட் மைதானத்தை அரசு கட்டி தந்து இவ்விளையாட்டை ஊக்கி வைக்க கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு டிஎன்சிஏ தலைவர் டி.ஜெ.சீனிவாசராஜ் சுழற்கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கி பேசியதாவது:

இன்று கிரிக்கெட் விளையாட்டில் நகர்புறங்களை சார்ந்தவர்களே அதிகமாக இருக்கின்றனர். இதுபோல் கிராமப்புற விளையாட்டு வீரர்கள் அதிகமாக பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். மாவட்டங்களில் மகளிர் சங்கங்களையும் உருவாக்கி மகளிரின் திறமைகளைகளையும் வெளி கொண்டு வர வேண்டும். வேலூருக்கு நவீன கிரிக்கெட் மைதானம் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அரசிடம் பெற்று தர முயல்வேன் என சீனிவராஜ் பேசினார்.

வேலூரில் நடைப்பெற்ற கிரிக்கெட் போட்டியில் வீனஸ் அணி முதல் இடமும், மெட்ரோ அணி இரண்டாவது இடத்தையும் பிடித்து கோப்பையை மற்றும் பரிசுகளையும் பெற்றன. இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ஸ்ரீதரன் ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில் உயர்மட்ட குழு உறுப்பினர் திவாகர் நன்றி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *