சென்னை, அக். 12–
கிண்டி பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கிண்டி, எம்ஆரு்சி உட்புற சாலை அருகே கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை மடக்கி விசாரித்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற அதன்பேரில் உத்திரமூர்த்தி (எ) நந்தா, யோசப், ஆகாஷ் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட 3 பேரும் போதைப்பொருளை பெங்களூரில் வாங்கி வந்து விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது. மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
![]()





