கடலூர், நவ. 26–
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கார் விபத்தில் காயமடைந்த 2 நபர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலையினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடலூர் வட்டத்தை சேர்ந்த கௌசல்யா மற்றும் அவரது கணவர் எள்ளப்பன் ஆகியோர் விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி 20.09.2025 அன்று காரில் பயணம் மேற்கொண்ட போது, ஐயூர் அகரம் பாலம் அருகே எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. உடனடியாக இவர்களுக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இத்தகவல் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை தொடர்ந்து, இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், விபத்தில் காயமடைந்த கௌசல்யா மற்றும் அவரது கணவர் எள்ளப்பன் ஆகியோர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
![]()





