செய்திகள்

காஞ்சிபுரம் ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

Makkal Kural Official

காஞ்சிபுரம், டிச. 16:

காஞ்சிபுரம் ராகவேந்திரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் செந்தமிழ் முறையில் சிறப்பாக நடைபெற்றது

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 41வது வார்டு ராகவேந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயம் கடந்த 2003ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தற்போது மிகுந்த பொருட்செலவில் மீண்டும் புனரமைக்கப்பட்டு கணபதி ஓமத்துடன் முதல் கால பூஜை நடைபெற்றது மேலும் காலை 7 மணிக்கு கோபூஜை இரண்டாம் காலையாக சாலை பூஜைகள் தொடங்கி முறையாக செந்தமிழ் முறையில் நடைபெற்றது.

மூலவர் சன்னதி மற்றும் மூலவர் கோபுரம் ஆகியவங்களுக்கான திருக்குடங்கள் மேளதாளங்கள் முழங்க திருக்கோயிலை வலம் வந்து பண்ணிசைமணி. விநாயகமூர்த்தி தலைமையில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ சக்தி விநாயகருக்கு மகா அபிஷேகங்கள் தொடங்கி நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் திருக்கோயில் பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் கோபி, சந்திரபாபு, எத்திராஜ், கார்த்திகேயன், ராஜேந்திரன் மற்றும் ராகவேந்திரா நகர் பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *